எம்.எல்.ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க தடையில்லை: சபாநாயகர் அறிவிப்பு

கர்நாடக எம்.எல்.ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க தடையில்லை என சட்டப்பேரவையில் சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 | 

எம்.எல்.ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க தடையில்லை: சபாநாயகர் அறிவிப்பு

கர்நாடக எம்.எல்.ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க தடையில்லை என சட்டப்பேரவையில் சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

கர்நாடகாவில் ஆளும் குமாரசாமி அரசுக்கு எதிராக, காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் 16 பேர் (காங்கிரஸ் - 13, மஜத -3) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  

இதையடுத்து, முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஏற்ப இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  தீர்மானத்தின் மீது முதலமைச்சர் குமாரசாமி உரையாற்றினார். அதைத்தொடர்ந்து எதிர்கட்சியினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. 

இதற்கிடையே கர்நாடக எம்.எல்.ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க தடையில்லை என சட்டப்பேரவையில் சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

ஏற்கனவே அதிருப்தி எம்.எல்.ஏக்களை வரவழைக்க காங்கிரஸ், மஜத கட்சிகளின் கொறடாக்கள் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகின. இதையடுத்து தற்போது சபாநாயகரின் இந்த உத்தரவு மூலம், காங்கிரஸ், மஜத கட்சிகளின் கொறடாக்கள், எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கலாம். அவ்வாறு உத்தரவு பிறப்பித்து அதற்கு எம்.எல்.ஏக்கள் கட்டுப்படவில்லை எனில் அவர்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்யலாம். 

இன்று சட்டப்பேரவையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் உள்ளிட்ட 20 எம்.எல்.ஏக்கள் அவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP