அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
 | 

கடந்த 1994ல் அயோத்தி விவகாரத்தில், இஸ்லாமியர்கள் தொழுகையை எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் எனக்கூறி பாபர் மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் உத்தரப்பிரதேச அரசு விரும்பினால் பாபர் மசூதி இடத்தை கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தீர்ப்பு நியாயமானது அல்ல என்று கூறி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 2010ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில், அயோத்தி நிலத்தை 3 பிரிவுகளாக பிரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் மூலம் மறுஆய்வு செய்யக் கோரி முஸ்லிம்கள் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கில், அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என தீர்ப்பளித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP