சுகாதாரத்துறை அமைச்சக கூட்டங்களில் இனி பிஸ்கட், குக்கீஸ் கிடையாது!

சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தொடர்பான கூட்டங்களில் இனி பிஸ்கெட், குக்கீஸ் உள்ளிட்ட உணவு வகைகளை வழங்க கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 | 

சுகாதாரத்துறை அமைச்சக கூட்டங்களில் இனி பிஸ்கட், குக்கீஸ் கிடையாது!

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தொடர்பான கூட்டங்களில் இனி பிஸ்கெட், குக்கீஸ் உள்ளிட்ட தின்பண்டங்களை வழங்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 19 ம் தேதி விடுத்துள்ள சுற்றறிக்கையில், அமைச்சக கூட்டங்களில் குக்கீஸ், பிஸ்கெட் அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகள் வழங்கக் கூடாது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு பதில் ஆரோக்கியம் தரும் வகையிலான உலர் பழங்கள், முந்திரி, பேரிச்சம்பழம்,  நட்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்களை மட்டுமே வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP