காஷ்மீர் அரசுப்பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக கணித ஆசிரியர் இல்லை: மாணவர்கள் புகார்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு பயிற்றுவிக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக கணித ஆசிரியர் இல்லை. இதற்கு ஜம்மு-காஷ்மீர் அரசு உதவி செய்ய வேண்டும் என்று அந்த பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 | 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஒரு சில பகுதிகளை தவிர பெரும்பாலான பகுதிகள் முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில்  9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு  பயிற்றுவிக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக கணித ஆசிரியர் இல்லை. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கணித ஆசிரியர் இல்லாத காரணத்தால் எங்களது கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் தலையிட்டு எங்களுக்கு கணித ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்றும் அந்த பள்ளியின் மாணவ மாணவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP