பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமேயில்லை- பிரதமர் மோடி

பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமேயில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 | 

பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமேயில்லை- பிரதமர் மோடி

பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமேயில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரி, பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அப்போது பேசிய மோடி, 2022 ம் ஆண்டு இந்தியாவின் 75வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் , அந்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடத்தப்பட உள்ளதாக அர்ஜென்டினா அதிபர் அறிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உலக அமைதிக்கும், ஸ்திரதன்மைக்கும் பயங்கரவாதம் பெரிய அசு்சுறுத்தலாக உள்ளதை நானும், அதிபர் மேக்ரியும் ஒப்புக் கொண்டுள்ளோம். புல்வாமாவில் நடந்த கொடூரமான தாக்குதலின் மூலம் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்து விட்டது என்பது நிரூபணமாகி உள்ளது.
 
இனி பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை. இது செயல்பாட்டில் இறங்குவதற்கான நேரம். ஒட்டுமொத்த உலகமும் பயங்கரவாதத்திற்கு எதிராக இப்போது ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குவதும், அதனை ஆதரிப்பதற்கு சமம் தான் என்றார்.

தொடர்ந்து பேசிய அர்ஜென்டினா அதிபர், புல்வாமா தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த விதமாக பயங்கரவாத தாக்குதல் நடத்தினாலும் அதனை கண்டிக்கிறோம். மனிதகுலத்தை காக்க பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP