வாக்குகளை இழப்பது குறித்து அச்சமில்லை - பினராயி விஜயன்

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை, பக்தர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி செயல்படுத்த கேரள அரசு முயற்சித்து வரும் சூழலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 | 

வாக்குகளை இழப்பது குறித்து அச்சமில்லை - பினராயி விஜயன்

கேரள மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே மாநில அரசின் நோக்கம். ஒரு சில தொகுதிகள் அல்லது வாக்குகளை இழப்பது குறித்து அச்சமில்லை என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை, பக்தர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி செயல்படுத்த கேரள அரசு முயற்சித்து வரும் சூழலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் விஜயன் பேசியதாவது:

”கேரள மாநிலத்தை வளர்ச்சி மற்றும் வளமிக்க பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மக்கள் ஒவ்வொருவரையும் மனிதனாகவும், வேறுபாடுகள் இன்றியும் கருதுகின்ற சூழலில் வளமிக்க கேரளம் என்பதை நாங்கள் தியாகம் செய்ய மாட்டோம். சிலர் கேரளாவில் மத பிரிவினையை உண்டாக்க நினைக்கின்றனர். நம்பிக்கை, சடங்கு என்ற பெயரில் அதுபோன்ற பிரிவினையை அனுமதித்தோமேயானால், இன்றைக்கு இருக்கக் கூடிய கேரளா எதிர்காலத்தில் நீடித்திருக்காது என்றார் அவர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP