நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன் -நெகிழ்ச்சியில் சசி தரூர்

திருவனந்தபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் சசி தரூர், அண்மையில் தேவி கோயிலுக்குச் சென்றபோது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவரிடம் பாஜக மூத்த தலைவர் நிர்மலா சீதாராமன் இன்று நலம் விசாரித்தார்.
 | 

நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன் -நெகிழ்ச்சியில் சசி தரூர்

தலையில் அடிபட்ட காயத்துக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூரை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திருவனந்தபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் சசி தரூர், அண்மையில் தேவி கோயிலுக்குச் சென்று எடைக்கு, எடை தானம் கொடுக்கும் நேர்த்திக்கடன் செலுத்தினார். அப்போது தராசு அறுந்து விழுந்ததில், அவரது தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அவரது காயத்துக்கு தையல் போட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிர்மலா சீதாராமன் இன்று சசி தரூரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுகுறித்து டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் கருத்து கூறியுள்ள சசி தரூர், “கேரளாவில் தேர்தல் பிரசார வேலைகளுக்கு மத்தியில் இன்று காலை நிர்மலா சீதாராமன் என்னைச் சந்தித்தது ஆறுதலை கொடுத்தது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP