பணப்புழக்கத்திற்கு பஞ்சமில்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பொருளாதார நிலையில் பணப் புழக்கத்திற்கு பஞ்சம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 | 

பணப்புழக்கத்திற்கு பஞ்சமில்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பொருளாதார நிலையில் பணப் புழக்கத்திற்கு பஞ்சம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

தனியார் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்திற்கு பின்னர் பேசிய அவர், 'இன்று தனியார் நிதி நிறுவன அதிகாரிகளுடன் நடந்த இந்த ஆலோசனைக்கூட்டம் மிகவும் உபயோகமானதாக இருந்தது, இந்தியாவில் நிதி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இவற்றில் பெரிய அளவிலான நிதி நிறுவனங்களும் சிறிய அளவிலான மைக்ரோ நிதி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. பணப்புழக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.

பணப்புழக்கம் குறித்து இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை. பி.எம்.சி வங்கி நெருக்கடி குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கார்ப்பரேட் வரியை குறைப்பதன் மூலம் தனியார் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும்.

அக்டோபர் 1ம் தேதி முதல் பென்ச் மார்க் அடிப்படையிலான கடன்களை வழங்க வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணப்புழக்கத்தில் சிக்கல் இருந்தால் அது பெரிய நிதி அளவில் மட்டுமே இருக்கும். சில்லறை வணிகத்தில் அல்ல

வாகன விற்பனையில் சரிவு என்பது சுழற்சி முறையில் இருக்கிறது. இதனை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீட்டுவசதி திட்டத்திற்கான கடன்கள் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. மேலும் பணப்புழக்கத்தில் தற்போது எந்தவித பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP