நிர்பய் ஏவுகணை சோதனை வெற்றி

ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் நிர்பய் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
 | 

நிர்பய் ஏவுகணை சோதனை வெற்றி

ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் நிர்பய் ஏவுகணையை இந்தியா இன்று, ஓடிஸா மாநிலத்திலுள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து ஏவி, சோதனை மேற்கொண்டதில் அது சோதனைக்கான அனைத்துத் தரவுகளிலும் வெற்றியடைந்துள்ளதாக டிஆர்டிஒ அறிவித்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் வரும், பெங்களூரை சேர்ந்த ஏடிஇ ஆய்வகம், நிர்பய் ஏவுகணையை தயாரித்துள்ளது.

நீண்ட தூர ஏவுகணையான நிர்பய், எல்லா பருவநிலைகளில் பயன்படுத்தவும், பல்வேறு தளங்களில் இருந்து ஏவுவதற்கும் ஏற்றது. 6 மீட்டர் நீளமும், அரை மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏவுகணையின் இறக்கைகள் 2.7 மீட்டர் அகலம் கொண்டவை.

ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதங்கள் உள்ளிட்ட 24 வகையான ஆயுதங்களை சுமந்து செல்ல வல்லது. தரையிலிருந்து 100 மீட்டர் முதல் 4 கிலோமீட்டர் வரை வெவ்வேறு உயரங்களில் பறந்துசெல்லும் திறன்பெற்றது.

எதிரிகளின் ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க மிகவும் தாழப்பறந்து செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இலக்குகளில் ஒன்றைத் தேர்வு செய்து தாக்கும் திறன்பெற்றது.

தாக்க வேண்டிய இலக்கை சுற்றிச்சென்று, அதன் பிறகு ஏதுவான கோணத்தில் இருந்து தாக்குதலை நிகழ்த்தும் வகையில், வழிகாட்டித் தொழில்நுட்பங்கள் உள்ளிணைக்கப்பட்டது மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP