காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு என்.ஐ.ஏ. சம்மன்

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி ஆதாரங்களை திரட்டியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் இருவருக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சம்மன் அனுப்பியுள்ளது.
 | 

ஹுரியத் மாநாட்டு இயக்கத் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக் மற்றும் பிரிவினைவாத இயக்கங்களின் மூத்த தலைவர் சையது அலி ஷா கிலானியினுடைய இளைய மகன் நஸீம் கிலானி ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக், நஸீம் கிலானி ஆகிய இருவரும் டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக மீர்வாய்ஸ் உள்பட பல்வேறு பிரிவினைவாதத் தலைவர்களின் வீடுகள், அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மாதம் 26ம் தேதி சோதனை நடத்தினர். அதே சமயம், புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரிவினைவாத் தலைவர்களுக்கான பாதுகாப்பை ஜம்மு-காஷ்மீர் அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP