தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் - இலங்கையில் ஆய்வு செய்ய என்.ஐ.ஏ. திட்டம்

அண்டை நாடான இலங்கையில் நிகழ்த்தப்பட்ட அந்தத் தாக்குதல் போல இந்தியாவிலும் நடத்தப்படுவதற்கான முயற்சிகள் நடைபெறக் கூடும் என்று என்.ஐ.ஏ. சந்தேகிக்கிறது. இதனால், இலங்கை சென்று அதுகுறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 | 

தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் - இலங்கையில் ஆய்வு செய்ய என்.ஐ.ஏ. திட்டம்

இலங்கையில் 300-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் குறித்து ஆய்வு செய்ய தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்டை நாடான இலங்கையில் நிகழ்த்தப்பட்ட அந்தத் தாக்குதல் போல இந்தியாவிலும் நடத்தப்படுவதற்கான முயற்சிகள் நடைபெறக் கூடும் என்று என்.ஐ.ஏ. சந்தேகிக்கிறது. இதனால், இலங்கை சென்று அதுகுறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இதற்காக அனுமதி கோரவுள்ளோம் என்று என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள், கடல் மார்க்கமாக தப்பி விடக் கூடாது என்பதற்காக இந்தியக் கடலோரப்படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP