Logo

புதிய வருமானவரி விலக்கு: கணக்கிடுவது எப்படி?

யாரும் ஏன் சம்பளதாரர்களே எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை நிதியமைச்சர் ப்யுஸ் கோயல் வழங்கி திக்குமுக்காடச் செய்திருக்கிறார்.. முன்பு இருந்த இரண்டரை லட்சம் என்பது இப்பொழுது ஐந்து லட்சமாக உயர்ந்திருக்கிறது. இனி ஆறரை லட்சம் வரை வருமான வரி விலக்குப் பெறலாம்.
 | 

புதிய வருமானவரி விலக்கு: கணக்கிடுவது எப்படி?

யாரும் ஏன் சம்பளதாரர்களே எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை நிதியமைச்சர் ப்யுஸ் கோயல் வழங்கி திக்குமுக்காடச் செய்திருக்கிறார்

இதுவரை இரண்டரை லட்சம் வருமானம் வரை விலக்கும் அதற்கு மேல் ஒன்றரை லட்சம் சேமிப்புடன் சேர்த்தால் நான்கு லட்சம் வரை வருமான வரியின்றி கொண்டு போகலாம்.

அதே தான் இப்பொழுதும், முன்பு இருந்த இரண்டரை லட்சம் என்பது இப்பொழுது ஐந்து லட்சமாக உயர்ந்திருக்கிறது. இனி ஆறரை லட்சம் வரை வருமான வரி விலக்குப் பெறலாம். ஆனால், அதன் பிறகு பத்து லட்சம் வரை 20% வரி வட்டத்திற்குள் வந்து விடுவோம். பத்து லட்சத்திற்கு மேல் வருமானமுள்ளவர்கள் 30% வரி வட்டத்திற்கு வந்துவிடுவார்கள். கூடுதலாக சுகாதாரம் மற்று கல்விக்கான செஸ் வரியாக 3 சதவீதம் சேரும்.

எடுத்துக்காட்டுக்கு ; 
ஒருவர் பத்து லட்சம் வருமானம் உடையவர் என்றால், 

அடிப்படை விலக்காக                - 5,00,000 /-
80 சியின் படி விலக்கு                - 1,50,000 /-
NPS ன் பங்களிப்பாக                  -  50,000 /-
ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன்           -  50,000 /-
மருத்துவ இன்ஸுரன்ஸ்க்கான ப்ரீமியம் - 50,000 /-
வீட்டுக் கடன் வட்டியாக              - 2,00,000 /-

இப்படியாக பத்து லட்சம் வரை முழுமையாக விலக்கு பெறலாம். 

அதுவே ஒருவருடைய மொத்த வருமானம் 15 லட்சமாக இருக்கும்பட்சத்தில் மேலேயுள்ள பத்து லட்சத்திற்கு மேலே கூறிய படி விலக்கினைப் பெற்று விட்டு  மீதமுள்ள 5 லட்சத்திற்கும் வரியாக ஒரு லட்சம் மட்டும் கட்டினால் போதும். 

இதுவே கடந்த ஆண்டு 15 லட்சம் வருமானம் உள்ளவராக இருப்பின் குறைந்த பட்சம் கூடுதலாக பன்னிரெண்டாயிரத்து ஐநூறு (12,500 /-) ரூபாய் கட்ட வேண்டி இருந்திருக்கும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP