பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அவதாரம்...ஆகஸ்ட் 12 -இல் காணலாம்!

டிஸ்கவரி சேனலில் மிகவும் பிரபலமான Man Vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளதை வரும் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி, இரவு 9 மணிக்கு நாம் கண்டு களிக்கலாம். மகிழ்ச்சிகரமான இந்த செய்தி குறித்து, இந்நிகழ்ச்சியை நடத்துபவரான பியர் கிரைல்ஸ் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 | 

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அவதாரம்...ஆகஸ்ட் 12 -இல் காணலாம்!

பொதுவெளியில் யோகா பயிற்சி மேற்கொள்வது, வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் போதெல்லாம் அங்கு பாரம்பரிய இசைக்கருவிகளை இசைப்பது என பிரதமர் நரேந்திர மோடியின் பன்முகத்தன்மை நமக்கு தெரிந்ததே. இந்த வரிசையில், இதுவரை யாரும் பார்த்திராத மோடியின் இன்னொரு முகத்தை காணும் வாய்ப்பு, உலகெங்கிலும் உள்ள அவரது அபிமானிகளுக்கு கிடைத்துள்ளது.

டிஸ்கவரி சேனலில் மிகவும் பிரபலமான Man Vs Wild நிகழ்ச்சியில் பிரதமர்  நரேந்திர மோடி பங்கேற்றுள்ளதை வரும் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி, இரவு 9 மணிக்கு நாம் கண்டு களிக்கலாம். மகிழ்ச்சிகரமான  இந்த செய்தி குறித்து, இந்நிகழ்ச்சியை நடத்துபவரான பியர் கிரைல்ஸ் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
அதில், 'உலகெங்கும் 180 நாடுகளில் உள்ள மக்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இன்னொரு முகத்தை, வரும் ஆகஸ்ட் 12- ஆம் தேதி காணலாம். வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்,  Man Vs Wild நிகழ்ச்சியில் என்னுடன் அவர் பங்கேற்ற த்ரிலான காட்சிகள் அன்றைய தினம் இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது' என பியர் கிரைல்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பிரத்யேக நிகழ்ச்சி குறித்த முன்னோட்ட வீடியோ காட்சிகளையும் தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP