புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 31ஆம் தேதி தாக்கல்?

புதிய கல்விக் கொள்கையை வகுப்பது தொடர்பான நிபுணர் குழு, தமது வரைவு அறிக்கையை, வரும் 31ம் தேதி தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிகிறது. பாடச்சுமையை குறைத்து, விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்தும் இருக்கும் எனத் தெரிகிறது.
 | 

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 31ஆம் தேதி தாக்கல்?

புதிய கல்விக் கொள்கையை வகுப்பது தொடர்பாக மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு, தமது வரைவு அறிக்கையை, வரும் 31ம் தேதி தாக்கல் செய்யவிருப்பதாகத் தெரிகிறது. மாணவர்களின் பாடச்சுமையை குறைத்து, விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அந்தக் கல்விக் கொள்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக, முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் முதலில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை 2016ல் தாக்கல் செய்தது. ஆனால், அந்த அறிக்கை அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. பின்னர், 2017ல் இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் 8 நபர்கள் அடங்கிய நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது.

புதிய கல்விக் கொள்கையை வகுக்கும்போது, சுப்பிரமணியன் குழுவினரின் அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்தச் சூழலில், வரைவு அறிக்கையை தாக்கல் செய்வதற்காக கஸ்தூரிரங்கன் குழுவினருக்கு மூன்று முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, வரும் 31ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படவிருப்பதாகத் தெரிகிறது.

இந்த வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்யும். பின்னர் அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அமலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP