உச்சநீதிமன்றம் குறித்த நேருவின் அனுமானம் விரைவில் உண்மையாகலாம் : மத்திய அரசு எச்சரிக்கை

நாடாளுமன்றத்தின் இன்னொரு கூடமாக உச்சநீதிமன்றம் ஆகிவிடுமோ என்று மறைந்த பிரதமர் நேரு அச்சம் தெரிவித்திருந்தார். அவரது அனுமானம் எதிர்காலத்தில் உண்மையாகலாம் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஏ.ஜி. வேணுகோபால் எச்சரித்துள்ளார்.
 | 

உச்சநீதிமன்றம் குறித்த நேருவின் அனுமானம் விரைவில் உண்மையாகலாம் : மத்திய அரசு எச்சரிக்கை

நாடாளுமன்றத்தின் இன்னொரு கூடமாக உச்சநீதிமன்றம் ஆகிவிடுமோ என்று மறைந்த பிரதமர் நேரு அச்சம் தெரிவித்திருந்தார். அவரது இந்த அனுமானம் எதிர்காலத்தில் உண்மையாகலாம் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஏ.ஜி.வேணுகோபால் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மேலும் பேசியதாவது:

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவு, உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை தெளிவாக வரையறுத்துள்ளது.  இந்தச்  சட்ட வரையறைகளுக்கு உட்பட்டுதான் உச்சநீதிமன்றம் நீதிபரிபாலம் செய்ய வேண்டும்.

ஆனால் நீதிநெறி என்ற பெயரில், நாட்டின் பிற ஜனநாயக அமைப்புகளைவிட தமக்குதான் உச்சபட்ச அதிகாரம் இருப்பதுபோல உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. உலகில் வேறெங்கும் நீதிமன்றங்கள் இதுபோன்று அடாவடியாக செயல்படுவதில்லை.

ஆபத்தான இந்தப் போக்கு தொடருமேயானால், நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூடமாக உச்சநீதிமன்றம் ஆகிவிடுமோ என்று மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு அச்சம் தெரிவித்திருந்தார். அவரது அனுமானம் விரைவில் உண்மையாகிவிடும் அபாயம் உள்ளது.

நீதிமன்றங்களுக்கும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களும் இடையே  மோதல் போக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அண்மையில்கூட சபரிமலை விவகாரத்தில், "ஒருவரது மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது" என அரசியல் சாசன அமர்வின் ஒரு நீதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால் மற்ற நான்கு நீதிபதிகளும் நீதிநெறியின் பெயரில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளனர். இப்படி ஒரு விஷயத்தில் இருவேறு குரல்களில் உச்சநீதிமன்றம் பேசுவது மிகவும் ஆபத்தானது. இந்தப் போக்கு உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்று வேணுகோபால் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP