பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு என்.சி.சி பயிற்சி: கேப்டன் அமரீந்தர் சிங் முடிவு

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என்.சி.சி பயிற்சியை கட்டாயமாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 | 

பஞ்சாப் மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு என்.சி.சி பயிற்சியை கட்டாயமாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், "பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என்.சி.சி பயிற்சியை கட்டாயமாக்குவதன் மூலம் இளம் வயதிலே ராணுவத்தில் சேர வாய்ப்பு கிடைக்கும். மேலும், ராணுவத்தில் சேருவது மூலம் அவர்கள் நாட்டிற்கும் சேவை செய்ய முடியும்; அதற்கான ஒரு முயற்சியாக இது அமையும். 

முதற்கட்டமாக பாகிஸ்தான் எல்லையையொட்டிய குர்தாஸ்பூர், தார்ன் தரன், அம்ரிஸ்தர் உள்ளிட்ட மாவட்டங்களில் இது செயல்படுத்தப்படும். 

வருகிற திங்கட்கிழமை இதுதொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டு, முடிவு செய்யப்பட்டு, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP