சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதல்: தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உள்பட மூவர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா அருகே அரான்பூரில் நக்சல் தீவிரவாதிகள் ஊடுருவினர். பின்னர் நக்சலைட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில், தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
 | 

சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதல்: தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உள்பட மூவர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் போல சத்தீஸ்கர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நக்சல்கள் தொடர்ந்து ஊடுருவி வருகின்றனர். அவர்களுக்கு இந்திய பாதுகாப்புடைப்படையினர் மற்றும் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இன்று தண்டேவாடா அருகே அரான்பூரில் ஊடுருவிய நக்சல் தீவிரவாதிகள், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் குழுவினர் மற்றும் அவர்களுடன் சென்ற வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை உருவாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP