கர்தார்பூர் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதி பெற்ற நவ்ஜோதி சித்து !!

சீக்கியர்களின் புனிதத்தலமான கர்தார்பூர் வழித்தடம், வரும் நவம்பர் 9 ஆம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், அதன் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதியளிக்குமாறு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியிருந்த பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரான நவ்ஜோதி சிங் சித்துவிற்கு அனுமதி அளித்து பதில் கடிதம் அனுப்பியுள்ளது வெளியுறவுத்துறை.
 | 

சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் கர்தார்பூர், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தேரா பாபா நானக் கோவிலையும், பாகிஸ்தானின் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் ஓர் வழித்தடமாகும். இதன் திறப்பு விழா வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதை தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரான நவ்ஜோதி சிங் சித்து, கடந்த 4ஆம் தேதி, பாகிஸ்தான் அரசிடமிருந்து, திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கும் வகையில் கடிதம் வந்துள்ளதாக கூறியுள்ளார். 

இதை தொடர்ந்து, புனித தல திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் முலம் தெரிவித்திருந்தும் அதற்கு பதில் கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ள சித்து, சீக்கியர்களின் முதல் குருவானவரின் 550வது பிறந்த நாளில் அங்கு செல்லாமல் இருப்பது வேதனையளிக்கும் விஷயமாக இருக்கும் என்பதால், தன்னை பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு குறிப்பிட்டிருந்த கடிதத்தை ஏற்று, வரும் நவம்பர் 9ஆம் தேதியன்று அவர் கர்தார்பூர் செல்ல அனுமதி வழங்கியுள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP