குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜனவரி 26 ஆம் தேதி 71வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
 | 

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

ஜனவரி 26 ஆம் தேதி 71வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் உளவுத்துறை மூலமாக, குடியரசு தின விழாவைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இதற்காக நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தபட்டுள்ளன. மங்களூர் விமான நிலையத்தில், வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நாட்டில் உள்ள அனைத்து ரயில் மற்றும் விமான நிலையங்களில்  தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீர் பிரச்சனை, குடியுரிமை சட்ட திருத்த மசோதா என எதிர்பலைகள் எழுந்துள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP