தேசிய மருத்துவ ஆணைய மசோதா வாக்கெடுப்பு: அதிமுகவினர் வெளிநடப்பு!

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகள் தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு வரும் நிலையில், அதிமுக எம்.பிக்கள் அவை வெளிநடப்பு செய்தனர்.
 | 

தேசிய மருத்துவ ஆணைய மசோதா வாக்கெடுப்பு: அதிமுகவினர் வெளிநடப்பு!

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகள் தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு வரும் நிலையில், அதிமுக எம்.பிக்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். 

தற்போது நீட் உள்ளிட்ட மருத்துவப்படிப்பு தொடர்பான பல்வேறு தேர்வுகளை இந்திய மருத்துவக் கழகம் (MCI) நடத்தி வருகிறது. இந்தக் கழகத்திற்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) என்கிற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வாக 'நெக்ஸ்ட்' தேர்வு நடத்தப்படும் என்றும் எய்ம்ஸ் உட்பட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் பயில இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் படிப்பில் சேர முடியும் என்பன போன்ற விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. 

இது தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய மசோதா நேற்று பல்வேறு கட்ட எதிர்ப்புகளை மீறி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.பிக்கள் அவை வெளிநடப்பு செய்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP