தேசிய மருத்துவ ஆணைய மசோதா: டெல்லியில் போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்!

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்.
 | 

தேசிய மருத்துவ ஆணைய மசோதா: டெல்லியில் போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்!

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்.

தற்போது நீட் உள்ளிட்ட மருத்துவப்படிப்பு தொடர்பான பல்வேறு தேர்வுகளை இந்திய மருத்துவக் கழகம் (MCI) நடத்தி வருகிறது. இந்தக் கழகத்திற்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) என்கிற புதிய அமைப்பை உருவாக்குவதுடன், மருத்துவத்துறை மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ளது இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா. எய்ம்ஸ் உட்பட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் பயில நாடு முழுவதும் ஒரே தகுதித் தேர்வாக நடத்தப்படும் 'நெக்ஸ்ட்' தேர்வில் வெற்றி பெற வேண்டும். 

இந்த மசோதா கடந்த 29ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்ட வடிவம் பெறும். 

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மருத்துவ சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர். தொடர்ந்து பல்வேறு நகரங்களிலும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிகிறது. இதனால், பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை உருவாகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP