மத்திய அரசு சார்பில் கொண்டாடப்படும் தேசிய பெண் குழந்தைகள்தினம்! #NationalGirlChildDay

பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண்கள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று டெல்லியில் சன்க்யாபுரியில் உள்ள பிரவாசி பாரதி கேந்திராவில் அரசு சார்பில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 | 

மத்திய அரசு சார்பில் கொண்டாடப்படும் தேசிய பெண் குழந்தைகள்தினம்! #NationalGirlChildDay

பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண்கள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில், 'எதிர்காலத்தை பிரகாசமாக்க பெண் குழந்தைகளை ஊக்குவிப்போம்' என்ற இலக்குடன் தேசிய பெண்கள் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தவும், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக வளரும் ஒரு சூழ்நிலையை உருவாக்கும் நோக்கிலும் இன்று இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. 

இதையடுத்து இன்று டெல்லியில் சன்க்யாபுரியில் உள்ள பிரவாசி பாரதி கேந்திராவில்  மத்திய அரசு சார்பில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி பங்கேற்று தலைமை ஏற்கிறார். 

பெண் குழந்தைகளுக்கான வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் Beti Bachao Beti Padhao (BBBP) என்ற திட்டம் குறித்த ஒரு புத்தகம் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP