தேசிய குடியுரிமை பதிவேடு - ஓர் பார்வை!!

அசாம் மாநிலத்தில் வசிக்கும் இந்தியர்களை கண்டறியவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நோக்கத்துடனும், கடந்த 2013ஆம் ஆண்டு தேசிய குடியுரிமை பதிவேடு ஒன்றை பராமரிக்குமாறு மத்திய அரசிற்கு உத்தரவு பிறப்பித்தது.
 | 

தேசிய குடியுரிமை பதிவேடு - ஓர் பார்வை!!

அசாம் : கடந்த 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் மற்றும் வங்கதேச விடுதலை போர் என அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு போர்களை தொடர்ந்து, வங்கதேச மக்கள் பலரும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இதை தொடர்ந்து, இந்தியர்களுக்கு வழங்கும் அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கும் அளித்து வந்தது அசாம் மாநில அரசு.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளினால் இந்தியர்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்த உச்ச நீதிமன்றம், அசாம் மாநிலத்தில் வசிக்கும் இந்தியர்களை கண்டறியவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நோக்கத்துடனும், கடந்த 2013ஆம் ஆண்டு தேசிய குடியுரிமை பதிவேடு ஒன்றை பராமரிக்குமாறு மத்திய அரசிற்கு உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேட்டின் தற்போதைய கணக்கின் படி, பதிவு செய்திருந்த 3,30,27,661 பேரில், 19,06,657 பேர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதால் அசாம் மாநிலத்தில் தொடர்ந்து சச்சரவு நிலவி வருகிறது. 

இதனிடையில், பட்டியலில் விடுபட்டிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், அவர்கள் வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யலாம் எனவும், கடந்த மார்ச் 24, 1971 முன்னர், பட்டியலில் விடுபட்டுள்ள மக்களின் முன்னோர்கள் இந்தியாவில் வாழ்ந்துள்ளனர் என்பதிற்கான ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP