நாளை இலங்கை செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி !

இன்று மாலத்தீவு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து நாளை இலங்கை செல்லவிருப்பதால் இலங்கையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
 | 

நாளை இலங்கை செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி !

இன்று மாலத்தீவு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து நாளை இலங்கை செல்லவிருப்பதால் இலங்கையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜுன் 8) மாலத்தீவு செல்கிறார். அங்கிருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு சென்று, அதிபர் சிறிசேனாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன் பின்னர் அவர் டெல்லிக்கு திரும்புகிறார்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.  காலை 11 மணியில் இருந்து 12 மணிவரை, இலங்கை அதிபரின் செயலகம் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்படும் என்றும், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் செல்பவர்கள், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்னதாகவே பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP