பெட்ரோல், டீசல் விலை குறித்து அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை!

பெட்ரோல், டீசலின் வரலாறு காணாத விதை உயர்வை தொடர்ந்து, இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 | 

பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை பற்றி ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி, இரு அமைச்சர்களையும் சந்தித்தார். உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியை குறைப்பது, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. 

ஈரான் மீது அமெரிக்க அரசு விதித்துள்ள பொருளாதார தடை நவம்பர் 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 80% வெளிநாட்டு இறக்குமதிகளை இந்தியா நம்பியுள்ள நிலையில், இதை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

இந்தியாவில் புதிய திட்டங்கள் மூலம், உள்நாட்டு எண்ணெய் வளங்களை ஆராய ரூ.5500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தர்மேந்திரா பிரதான தெரிவித்துள்ளார். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP