மோடியின் தூக்கம் விரைவில் கலையும்: ராகுல்

விவசாய கடன் தள்ளுபடி விஷயத்தில் பிரதமர் மோடியின் தூக்கம் விரைவில் கலையும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அஸ்ஸாமில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 | 

மோடியின் தூக்கம் விரைவில் கலையும்: ராகுல்

விவசாய கடன் தள்ளுபடி விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடியின்  தூக்கமும் விரைவில் கலையும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பாஜக ஆட்சி செய்யும் மாநிலமான அஸ்ஸாமில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி  ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில ஊரக பகுதிகளின் மின்சார கட்டணத்தை ரத்து செய்து அந்த மாநில அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதேபோன்று, பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான அஸ்ஸாமில், ரூ.600 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய அம்மாநில முதல்வர் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

இவற்றை குறிப்பிட்டு, ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசுகள், முதல்வேலையாக விவசாய கடன் தள்ளுபடியை அறிவித்தன. இதனால் வேறு வழியின்றி பாஜக ஆளும் அஸ்ஸாமில் விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக அந்த  மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அவரை போன்று, இந்த விஷயத்தில் பிரதமர்  நரேந்திர மோடியின் தூக்கமும் விரைவில் கலையும்" என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று, "விவசாய கடன் தள்ளுபடியை அறிவிக்கும் வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம்" என ராகுல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP