முதல் முறையாக ராஜ்தானி விரைவு ரயிலில் நாப்கின் வழங்கும் இயந்திரம்

நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ராஜ்தானி விரைவு ரயில் பெட்டியில் முதல் முறையாக பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
 | 

நேற்று (மார்ச் 8) உலக மகளிர் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் முதல் முறையாக ரயில் பெட்டியில் சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து டெல்லி செல்லும் ராஜ்தானி விரைவு ரயிலில் நேற்று இந்த இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ரூ5-க்கு தரமான நாப்கின் வழங்கப்படுகிறது. பெண்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மேற்கு ரயில்வே தலைமை அதிகாரி ரவீந்தர் பக்கர் கூறுகையில், "சோதனைக்காக முதலில் இந்த விரைவு ரயில் நாப்கின் வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற விரைவு ரயில்களிலும் இது கொண்டு வரப்படும். நீண்ட தூரம் ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு இது உதவியாக உள்ளது" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP