கிர் தேசிய பூங்காவில் மர்ம வைரஸ்: 21 சிங்கங்கள் பலி!

கிர் பூங்காவை உள்ள மிக அரிய வகை ஆசிய சிங்கங்களை மர்ம வைரஸ் நோய் தாக்கி வரும் நிலையில், இதுவரை பலியான சிங்கங்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.
 | 

கிர் தேசிய பூங்காவில் மர்ம வைரஸ்: 21 சிங்கங்கள் பலி!

கிர் பூங்காவை உள்ள மிக அரிய வகை ஆசிய சிங்கங்களை மர்ம வைரஸ் நோய் தாக்கி வரும் நிலையில், இதுவரை பலியான சிங்கங்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. 

குஜராத்தின் ஜுனகர் பகுதியை சேர்ந்த 7 சிங்கங்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளன. இதனால், இதுவரை இந்த மர்ம வைரஸுக்கு பலியான சிங்கங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 12  தேதி முதல் கிர் தேசிய பூங்காவின் டல்கானியா பகுதியை சுற்றி 21 சிங்கங்கள் பலியாகியுள்ளன.

ஜுனகர் பகுதியில் தலைமை வனத்துறை அதிகாரி இதுகுறித்து பேசியபோது, "வேறு எந்த பகுதியிலும் சிங்கங்கள் இறந்ததாக தெரியவில்லை. சமர்தி பகுதியில் இருந்து 31 சிங்கங்களை மீட்டு  தனிமையில் வைத்து பாதுகாத்து வருகிறோம். எல்லா மருத்துவ சோதனைகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என கூறினார். 

இந்த திடீர் வைரஸ் தாக்குதலால், அரிய ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுளளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP