மர்ம நபர்கள் தாக்குதல்; ஒடிசா காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு!

ஒடிசா சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.
 | 

மர்ம நபர்கள் தாக்குதல்; ஒடிசா காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு!

ஒடிசா சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பிஜூ ஜனதா தள கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஒடிசாவில் மீண்டும் நவீன் பட்நாயக் தலைமையில் ஆட்சி அமைகிறது.

இங்கு அஸ்கா என்ற சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மனோஜ் ஜேனா என்பவர் போட்டியிட்டார். இவர், தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்ததை அடுத்து கடந்த 22ஆம் தேதி சொந்த ஊருக்கு சென்றார். கஞ்சாம் என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிரே பைக்கில் வந்த 2 பேர் காரை நிறுத்தி அவரை சரமாரியாக சுட்டு விட்டு தப்பிவிட்டனர்.

தையடுத்து அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்கா சட்டசபை தொகுதியில் ஆளும் பிஜு ஜனதா தள வேட்பாளர் மஞ்சுளா ஸ்வான் என்பவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP