எனது கருத்தை திரித்து கூறப்பட்டுள்ளது: பிரகாஷ் ராஜ் விளக்கம்!

தமிழ் மாணவர்கள் குறித்து தான் பேசியது திரித்து கூறப்பட்டுள்ளது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் தெரிவித்துள்ளார்.
 | 

தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது என்று என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருந்தார். அவர் கூறிய கருத்துக்கள் சரியே என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார். இதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழ் மாணவர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், இது தொடர்பாக பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தவறான எண்ணத்தோடு எனது கருத்தைத் திரித்து கூறியுள்ளனர். டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழக மாணவர்கள் பறிப்பதாக நான் ஒருபோதும் கூறவில்லை. எனது கருத்தை தவறாக திரித்து கூறியவர்கள் வெட்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP