வங்கித்துறையில் முதல் கவனம் செலுத்த இருக்கிறேன்: ஆர்.பி.ஐ கவர்னர்

பொருளாதாரத்தில் வங்கித்துறை முக்கிய பங்காற்றுகிறது, எனவே வங்கித்துறையில் தான் நான் முதல் கவனம் செலுத்த இருக்கிறேன் என ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சக்திஹந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.
 | 

வங்கித்துறையில் முதல் கவனம் செலுத்த இருக்கிறேன்: ஆர்.பி.ஐ கவர்னர்

பொருளாதாரத்தில் வங்கித்துறை முக்கிய பங்காற்றுகிறது, எனவே வங்கித்துறையில் தான் நான் முதல் கவனம் செலுத்த இருக்கிறேன் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திஹந்தா தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த  உர்ஜித் பட்டேல் நேற்று முன்தினம் (டிச.12) தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, நேற்று ஆர்.பி.ஐயின் புதிய கவர்னராக சக்திஹந்தா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சக்திஹந்தா தாஸ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "வங்கித்துறையை நிர்ணயிப்பது மட்டுமன்றி நாட்டின் பொதுவான நிதிநிலையை கண்காணிப்பதும் ரிசர்வ் வங்கியின் பணி.

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுவாதற்கு என்னால் கருத்து கூற முடியாது. என்ன பிரச்னை என்பது குறித்து ஆராய்ந்து, அவர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். 

வங்கித்துறையில் முதல் கவனம் செலுத்த இருக்கிறேன்: ஆர்.பி.ஐ கவர்னர்

மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் ஒரு பங்குதாரர் மட்டுமல்ல. நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் நாட்டில் எந்த ஒரு அமைப்பும் சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில், மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்படும்

பொருளாதாரத்தில் வங்கித்துறை முக்கிய பங்காற்றுகிறது. எனவே வங்கித்துறையில் தான் நான் முதல் கவனம் செலுத்த இருக்கிறேன். இதற்காக பல்வேறு வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்த இருக்கிறேன். ரிசர்வ் வங்கியின் மீதுள்ள  சுயாட்சி மற்றும் நம்பகத்தன்மைஉறுதி செய்யப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவேன்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP