எனது கருத்துகள்  திட்டமிட்டு திரிக்கப்படுகின்றன: மத்திய அமைச்சர் வேதனை

பாஜகவுக்கும், தனக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற தவறான நோக்கத்தில், சமீபகாலமாக தனது கருத்துகளை சில அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் திரித்து வருகின்றன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை தெரிவித்துள்ளார்.
 | 

மகாராஷ்டிர மாநிலம், புனேவில் சனிக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். வெற்றிக்கு உரிமைக் கொண்டாட விரும்புபவர்கள், தோல்விக்கும் பொறுப்பேற்க முன்வர வேண்டும். தேர்தலில் ஒரு கட்சியின் வெற்றிக்கும், தோல்விக்கும் அதன் தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும்" எனப் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதனால், பாஜகவின் தலைவர் அமித் ஷா, நிதின் கட்கரி மறைமுகமாக சாடுகிறாரா? என்ற கேள்வி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள நிதின் கட்கரி, ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "அண்மையில் வெளியான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு ஒரு எச்சரிக்கையை அளித்துள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற இந்தத் தேர்தல் முடிவுகள் உதவியாகவே இருக்கும் என்ற பொருளில் தான் பேசினேன். ஆனால், எனது பேச்சுகளை சில அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள்  திட்டமிட்டு திரித்து வெளியிட்டு வருவதை சமீபகாலமாக அறிய முடிகிறது.

பாஜகவுக்கும் , எனக்கும் இடையே எப்படியாவது பிளவை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற அவர்களின் தீய நோக்கம் ஒருபோதும் பலிக்காது. இத்தகைய சதிகாரர்களுக்கு மீண்டும் எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கட்கரி கூறியுள்ளார். 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP