மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஹோட்டல் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டுதல் மற்றும் கொலை முயற்சி செய்த வழக்கில் பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீது பணம் கேட்டு மிரட்டல், போதை மருந்து கடத்தல், கொலை, கொள்ளை என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்தோனேஷியாவிற்கு தப்பி ஓடிய சோட்டா ராஜன் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். 

இவர் கடந்த 2012ஆம் ஆண்டு பிரபல ஹோட்டல் உரிமையாளர் பி.ஆர்.ஷெட்டி என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவரை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் முடிவில்,சோட்டா ராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேருக்கு தலா 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் தலா ரூ. 5 லட்சம் அபராதம்  விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP