ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: மும்பை ஐஐடி பட்டதாரி முதலிடம்!

யு.பி.எஸ்.சி., நடத்திய 2018-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில்மும்பை ஐஐடியில் பி.டெக்., பட்டம் பெற்றுள்ள கனிஷாக் கட்டாரியா இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
 | 

ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: மும்பை ஐஐடி பட்டதாரி முதலிடம்!

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு நடத்தப்பட்ட, 2018 - ஆம் ஆண்டுக்கான இறுதி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ள இத்தேர்வு முடிவில், மும்பை ஐஐடியில் பி.டெக்., பட்டம் பெற்றுள்ள கனிஷாக் கட்டாரியா இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதேபோன்று, மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரான போபாலை சேர்ந்த சுருஸ்தி ஜெயந்த் தேஷ்முக் என்ற பி.இ. பட்டதாரி, பெண்கள் பிரிவில் முதலிடமும், தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கு மொத்தம் 759 பேர் அடங்கிய தேர்வுப் பட்டியலை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில், 577 பேர் ஆண்கள், 182 பேர் பெண்களாவர். 

ஐஏஎஸ் தேர்வில், இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ள கனிஷாக் கட்டாரியா, எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP