மும்பை தாக்குதல்: பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட்

மும்பை தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை அடுத்து, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இதுகுறித்து பதிவிட்டுள்ளனர்.
 | 

மும்பை தாக்குதல்: பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட்

மும்பை தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை அடுத்து,  பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கடல் வழியாக ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். மும்பையின் பல்வேறு இடங்களில் 3 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான். உலகையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இந்நிலையில் மும்பையில் ஜிம்கானா பகுதியில் உள்ள நினைவிடத்தில் இன்று தலைவர்கள், பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர். 

மேலும், இதுகுறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளனர். 

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மும்பை தாக்குதலில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தாக்குதலில் பொது மக்களோடு வீரர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை வீழ்த்திய நமது வீரர்களுக்கு இந்த நாடு தலை வணங்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "மும்பை தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று..தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தின் வலியை உணர முடிகிறது. அவரது எனது ஆழ்ந்த இரங்கல்கள். தீவிரவாதிகளை வீழ்த்திய நமது வீரர்களின் தியாகம் மற்றும் தைரியத்திற்கு பாராட்டுகள்" என பதிவிட்டுள்ளார். 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP