பன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி பன்மொழி இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
 | 

பன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி பன்மொழி இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். 

கடந்த செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி தினத்தன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. உலக அளவில் இந்தியாவின் பொதுமொழியாக ஹிந்தி இருக்க வேண்டும். அந்த தகுதி ஹிந்தி மொழிக்கு உள்ளது' என பதிவிட்டு இருந்தார்.

இந்த கருத்துக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி பன்மொழி இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர், இந்தியாவில் உள்ள ஒரியா, மராத்தி, கன்னடா, தமிழ், இங்கிலீஷ், குஜராத்தி,பெங்காலி, உருது, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளை குறிப்பிட்டு இந்தியாவில் பல மொழிகள் இருப்பது அதன் பலவீனம் அல்ல என்று பதவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP