தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: வெங்கையா நாயுடு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆங்கிலத்தில் வாதிடுவது ஏன்? என்று துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.
 | 

தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: வெங்கையா நாயுடு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆங்கிலத்தில் வாதிடுவது ஏன்? என்று துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய 'லிசனிங், லேர்னிங், லீடிங்' என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு பேசினர். 

விழாவில் பேசிய துணைக்குடியரசுத் தலைவர், "ஒருவர் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தாய்மொழி நமது இரு கண்கள் போன்றது. அதன் மேல் அணியும் கண்ணாடி தான் மற்ற மொழிகள். முதலில் கண் நமக்கு தெளிவாக தெரிய வேண்டும். வயதான பின்னர் தெளிவாக தெரியவே வேண்டும் என்பதற்காக கண்ணாடி அணிந்து கொள்கிறோம். அதுபோல தான்,  தாய் மொழியை அறிந்து கொண்டு மற்ற மொழிகளையும் அறிந்து கொள்வதனால் நாம் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே எளிதாக பயணிக்க முடியும். 

தாய் மொழி தவிர மற்ற மொழிகளையும் கற்றுக் கொண்டதனால்தான் என்னால் மக்களிடம் இயல்பாக பேச முடிந்தது; அவரது உணர்வுகளை உணர முடிந்தது. எந்த ஒரு மொழியையும் திணிக்கவும் கூடாது; எதிர்க்கவும் கூடாது என்பதை நான் கடைப்பிடித்து வருகிறேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆங்கிலத்தில் வாதிடுவது ஏன்? அந்த மனுதாரருக்கும், நீதிமன்றத்தில் இருக்கும் அனைவருக்கும் ஆங்கில மொழி புரியுமா? என்று எனக்குத் தெரியவில்லை. எனவே, மாநிலத்தில் மக்கள் சார்ந்த விஷயங்களுக்கு தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP