கேரளாவுக்கு ரூ.600 கோடியைத் தொடர்ந்து மேலும் நிதியுதவி அளிக்கப்படும்: மத்திய அரசு

கேரளாவுக்கு மத்திய அரசு ரூ.600 கோடி அளித்தது முதல்கட்ட உதவி தான். மேலும் உதவிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

கேரளாவுக்கு ரூ.600 கோடியைத் தொடர்ந்து மேலும் நிதியுதவி அளிக்கப்படும்: மத்திய அரசு தகவல்!

கேரளாவுக்கு மத்திய அரசு ரூ.600 கோடி அளித்தது முதல்கட்ட உதவி தான். மேலும் உதவிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் வரலாறு காணாத மழையால் சுமார் 350க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ள நிலையில், 10 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பெரும் பொருட் சேதத்தை சந்தித்துள்ள கேரளாவுக்கு, உலக நாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிவாரண உதவிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மேலும், சமூக ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள், என தனிப்பட்ட பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் நாடு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோன்று  கத்தார் நாடும் ரூ.35 கோடி நிதி உதவி தர முன்வந்துள்ளது. ஆனால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நாமே மேற்கொள்வது என்பதையே இந்தியா கொள்கையாக பின்பற்றி வருவதால் இதனை ஏற்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் மனிதாபிமான அடிப்படையில் கேரளாவுக்கு உதவிகளை செய்யத்தயார் என அறிவித்திருந்தார். 

நல்லெண்ண அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை மத்திய அரசு ஏற்கலாம் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், கேரள வெள்ள நிவாரணமாக மத்திய அரசு அளித்துள்ள ரூ.600 கோடி என்பது முதல்கட்ட நிதியுதவி தான், மேலும் தொடர்ந்து நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP