சந்திரயான் 2 நாளை விண்ணில் பாயும் - இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான் 2 நாளை விண்ணில் பாயும் என்றும் இனிமேல் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்படாது என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
 | 

இன்று சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோவின் தலைவர் சிவன், "சந்திரயான் 2 எப்போது விண்ணில் ஏவப்படும் என்று உலக அளவில் அறிவியலாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டபடி சந்திரயான் 2 நாளை(ஜூலை 22) விண்ணில் ஏவப்படும். 

இனிமேல் சந்திரயான் 2 விண்கலத்தில் எந்தவித தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்படாது. சந்திரயான் 2 பாதுகாப்பாக, வெற்றிகரமாக விண்ணில் ஏவும் பட்சத்தில் உலக அளவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தனித்துவமான பெருமையை பெறும்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP