பிரதமர் பதவியில் 180 நாட்கள் முடிவடைந்த நிலையில் மோடி ட்வீட்!!

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலை தொடர்ந்து, இந்த ஆண்டின் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கும் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்று இன்றுடன் 180 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
 | 

இந்த ஆண்டிற்கான மக்களவை தேர்தலில் கடந்த ஆண்டை விட அதிகபடியாக வெற்றி பெற்றது பாரதிய ஜனதா கட்சி. இதை தொடர்ந்து நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று இன்றுடன் 6 மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில், நாட்டின் முன்னேற்றத்திற்காக இதுவரை செயலாற்றியதை விட பன்மடங்கு செயலாற்றவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் 130 கோடி மக்களின் துணையுடன், தற்போதைய முன்னேற்றங்களை விட பல மடங்கு முன்னேற்றங்களை இந்தியா விரைவில் காணும் எனவும், இந்தியாவிற்காக அயராது உழைக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் பிரதமர் மோடி. 

கடந்த 6 மாத கால ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சிக்காக பலவகையான முயற்சிகள் எடுத்துள்ளதாக கூறிய பிரதமர், இதை மேலும் சிறப்பாக செய்வதற்கு இன்று போலவே மக்களின் முழு ஒத்துழைப்பும் என்றும் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP