ஒத்துக்குறோம்...மோடி சுனாமிக்கு முன்னாடி யாரும் நிக்க முடியலன்னு... உண்மையை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்!

மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் நரேந்திர மோடி எனும் பேரலை (சுனாமி) வீசியது. அந்த அலைக்கு முன் வேறெந்த தலைவரும் நிற்க முடியாமல் போனது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
 | 

இதுதொடர்பாக அவர், மும்பையில் செய்தியாளர்களிடம் இன்று மேலும் கூறியது:
அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. பாஜகவின் இந்த விஸ்வரூப வெற்றிக்கு, நரேந்திர மோடி எனும் சுனாமி முழுவதும் வீசியதே காரணம். அந்த பேரலைக்கு முன், வேறெந்த தலைவர்களும் நிற்க முடியாமல் போனது. நாட்டு மக்கள் மத்தியில் நரேந்திர மோடிக்கு இருக்கும் செல்வாக்கும் பாஜகவின் இந்த அபார வெற்றிக்கு மற்றொரு காரணம் என்று சல்மான் குர்ஷித் கூறினார்.

அவரது இந்தக் கருத்தை விமர்சிக்கும் விதத்தில், காங்கிரஸின் மற்றொரு தலைவரான  தாரிக் அன்வர் கூறும்போது, " அண்மையில் நடைபெற்ற எம்.பி., தேர்தலில் மோடி எனும் சுனாமி வீசியது உண்மைதான். ஆனால், ஒவ்வொரு முறையும் சுனாமி வீச வாய்ப்பில்லை. அடுத்த தேர்தலில் நிச்சயமாக நரேந்திர மோடி எனும் சுனாமி வீசாது" என்றார் அவர்.

 காங்கிரஸ் தலைவர்களின் இக்கருத்து குறித்து, மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, " மோடி அலை என்பது அவரது கடின உழைப்பால் வந்தது.  முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் தி்ட்டங்களை அங்கீகரிக்கும் விதத்தில் தான், நாட்டு மக்கள் பாஜகவுக்கு மீண்டும் ஆட்சி செய்யும் வாய்ப்பை அளித்துள்ளனர். அடுத்த மக்களவைத் தேர்தலிலும் மோடி அலை வீசத்தான் செய்யும்" என நக்வி தெரிவித்தார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP