மோடியால் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்: அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடியால் 2019ம் ஆண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தின் முதல் நாளில் தெரிவித்தார்.
 | 

மோடியால் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்: அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடியால் 2019ம் ஆண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

பா.ஜ.கவின்  2 நாள் தேசிய செயற்குழு கூட்டம், டெல்லியில் கட்சியின் தலைவர் அமித்ஷா தலைமையில் நேற்று தொடங்கியது. கேரள வெள்ள பேரழிவு மற்றும் எதிர்வரும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கட்சியின் தலைவர் அமித் ஷா, கடந்த தேர்தலை விட, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அதிக இடங்களை கைப்பற்றி, பா.ஜ.க ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 

பாரதிய ஜனதா தொண்டர்கள் இதற்காக முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டை பிளவுப்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய அமித்ஷா, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒரு கண் துடைப்பு நாடகம் என்றும் விமர்சித்தார். மேலும் நரேந்திர மோடியால் 2019ம் ஆண்டு பா.ஜ.க அரசு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலை, அமித்ஷா தலைமையில் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.  அமித்ஷாவின் பதவிக்காலம், வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில்,  நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை, பதவி நீட்டிப்பு அளிக்க, அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

இன்று இரண்டாவது நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர்  நரேந்திர மோடி இன்றைய கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். இந்த கூட்டத்தில் வெற்றி வியூகம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP