தேசத்துரோகம் செய்துள்ளார் மோடி - ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு 10 நாள் முன்னதாக, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரை அனில் அம்பானி சந்தித்தது எப்படி? என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும். அவர் தேசத்துரோகம் இழைத்துள்ளார் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
 | 

தேசத்துரோகம் செய்துள்ளார் மோடி - ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு

பாதுகாப்புத்துறை தொடர்பான விஷயங்களை பிறருக்கு தெரியப்படுத்தியதன் மூலமாக, பிரதமர் நரேந்திர மோடி தேசத்துரோகம் இழைத்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னதாக, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு 10 நாள் முன்னதாக, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சரை, ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ராகுல் கூறியதாவது:

"அனில் அம்பானிக்கான இடைத்தரகராக மோடி செயல்படுகிறார். ரஃபேல் ஒப்பந்தத்துக்கு 10 நாள் முன்னதாக, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரை அனில் அம்பானி சந்தித்தாக, ‘ஏர்பஸ்’ நிறுவன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆக, 10 நாள்களுக்கு முன்பே அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் குறித்து எப்படி தெரியும்? என்ற கேள்விக்கு மோடி பதில் அளிக்க வேண்டும். அலுவலக ரகசியச் சட்ட விதிகளை பிரதமர் மீறியிருக்கிறார். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் தேசத்துரோகம் இழைத்துள்ளார். ஒரு ஒற்றன் என்ன செய்வாரோ, அதையே அவரும் செய்திருக்கிறார். யாரோ சிலருக்கு பாதுகாப்புத்துறை சார்ந்த ரகசியங்களை அவர் தெரிவித்துள்ளார்" என்றார் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.


newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP