‘மன் கி பாத் நிகழ்ச்சியில் 'சர்தார் வல்லபாய் படேலுக்கு' மோடி புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், ’இரும்பு மனிதர்’ என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பெருமைகள் குறித்தும், வருகிற 31-ந்தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று, உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறப்பு குறித்தும் பேசியுள்ளார்.
 | 

‘மன் கி பாத் நிகழ்ச்சியில் 'சர்தார் வல்லபாய் படேலுக்கு' மோடி புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், ’இரும்பு மனிதர்’ என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பெருமைகள் குறித்தும், வருகிற 31-ந்தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று,  உலகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறப்பு குறித்தும் பேசியுள்ளார். 

இது பற்றி பிரதமர் மோடி பேசியதாவது:-

ஒருங்கிணைந்த இந்தியாவை நம்மால் இப்போது பார்க்க முடிகிறது என்றால், அதற்கு சர்தார் வல்லபாய் படேலின் புத்திகூர்மையும், திறமையும் முழு முதற் காரணமாகும்.

மாநிலங்களில் ஏற்படக் கூடிய திடீர் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு காணும் திறன் சர்தார் வல்லபாய் படேலுக்கு மட்டுமே இருந்ததாக மகாத்மா காந்தி கருதினார். பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒருங்கிணைந்த பெருமை அவரையே சாரும்.

வருகிற 31-ந்தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று ஒற்றுமையின் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் அவருக்கு உண்மையான மரியாதை வழங்கப்படுகிறது.

குஜராத்தின் நர்மதா ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போன்று இரண்டு மடங்கு உயரம் கொண்டதாகும்.  இதுவே உலகின் மிக உயர்ந்த விண்ணை முட்டும் சிலையாகத் திகழும். இந்திய மண்ணில் உலகிலேயே மிக உயரமான சிலையை காண்பதன் மூலம் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள முடியும். இந்த சிலை ஒரு புதிய மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக தடம் பதிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

31-ந்தேதி இந்தியா முழுவதும் ஒற்றுமை ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வருகிற 31-ந்தேதி மற்றொரு முக்கிய தினமும் கூட. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம். அவருக்கு நாம் மதிப்பு மிக்க மரியாதையை செலுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP