கேதர்நாத் பயணத்தை சிலர் அரசியலாக்கினர் - 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி!

இந்தியா மிகப்பெரிய ஒரு மாபெரும் தேர்தலை நடத்தி முடித்துள்ளது. ஜனநாயகத்தில் மக்கள் உண்மையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதை இந்த தேர்தல் எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
 | 

கேதர்நாத் பயணத்தை சிலர் அரசியலாக்கினர் -  'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி!

இந்தியா ஒரு மாபெரும் தேர்தலை நடத்தி முடித்துள்ளது.  ஜனநாயகத்தில் மக்கள் உண்மையான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி மன்கி-பாத் உரையில் சுட்டிக் காட்டியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை 2வது முறையாக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக  'மன் கி பாத்' நிகழ்ச்சியில் இன்று உரையாற்றியுள்ளார். 

அப்போது அவர் பேசுகையில், "நான் கடந்த பிப்ரவரி மாதம் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசும்போது, நான் மீண்டும் திரும்பி வருவேன் என்று கூறினேன். 'மோடிக்கு அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை தான்' ஒரு சிலர் நினைத்தாலும், நான் திரும்பி வருவேன் என்று வாக்களித்த மக்களுக்கு தெரியும். நான் சுறுசுறுப்புடன் இயங்க நம் நாட்டு மக்களுக்கும், எனக்கும் உள்ள இணக்கம் தான் காரணம். 

இந்தியா மிகப்பெரிய ஒரு மாபெரும் தேர்தலை நடத்தி முடித்துள்ளது.  ஜனநாயகத்தில் மக்கள் உண்மையான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் எடுத்துக்காட்டுகிறது.

நடைபெற்று முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது என்பது நம் ஜனநாயகத்தில் பெருமைக்குரிய நிகழ்வாகும். 

இந்த மாபெரும்  தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

கேதர்நாத் பயணத்தை சிலர் அரசியலாக்கினர் -  'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி!

கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் ஒரு பகுதியே ஜனநாயகம். நாட்டு மக்கள் இந்த ஜனநாயகத்தை காப்பாற்றிட வேண்டி 2வது முறையாக பாஜகவுக்கு வாய்ப்பளித்துள்ளனர். 

தேர்தல் நிறைவடைந்ததும், எனக்குள் ஒளிந்திருக்கும் என்னையே தேடிக்கொள்ள கேதார்நாத் பயணத்தை பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் அதனை சிலர் அரசியலாக்கினர். 

எமர்ஜென்சி இந்தியாவில் கொண்டுவரப்பட்ட போது, அனைத்து மக்களுமே மிகவும் கோபமுற்றனர். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக கருதினர். ஜனநாயகம் தோல்வியுற்றது. நமக்கு பசிக்கும்போதெல்லாம் உணவு கிடைத்தால் பசியின் அருமை தெரியாது. அது கிடைக்காத போதுதான் உணவின் அருமை நமக்குத் தெரியும். அதுபோல தான். மக்களின் அத்தியாவசியமான உரிமைகள் பறிக்கப்பட்டது.  உரிமைகள் பறிக்கப்பட்டதும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அதன் முடிவை, மக்கள் நெருக்கடி நிலையை அடுத்து நடைபெற்ற தேர்தலில் காட்டினர். அதில் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவராக இருந்த இந்திராவின் படுதோல்வியடைந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு, புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம்சந்த்-தின் புத்தகங்களை எனக்கு ஒருவர் கொடுத்தார். அதனை படித்து முடித்த போதிலும் மீண்டும் அதனை படிக்க விரும்புகிறேன். மனித உணர்வுகள் அவரது வார்த்தைகளில் தனித்து நிற்கிறது. அனைவருமே வாசிப்புக்கு என்று சற்று நேரம் ஒதுக்குங்கள் என நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யோகாவுடன் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் இணக்கத்தில் உள்ளனர். கடந்த ஆண்டை விட சமீபத்தில் நடந்த 5வது ஆண்டு யோகா தினத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு யோகா செய்ததோடு, யோகாவை கொண்டாடினர்" என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவருடை மன்கி-பாத் உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP