ஷேக் ஹசீனாவுக்கு மோடி வாழ்த்து!

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தம்மை வாழ்த்தியதற்காக ஹசீனா, மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 | 

ஷேக் ஹசீனாவுக்கு மோடி வாழ்த்து!

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள  ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி,  "பொதுத் தேர்தலில் மகத்தான  வெற்றி பெற்றுள்ளதற்காகவும், தங்களின் பணி சிறக்கவும் வாழ்த்துகள். வங்கதேசத்தின் வளர்ச்சிக்காக இந்தியா தொடர்ந்து தனது பங்களிப்பை அளிக்கும். இதன் மூலம் இருதரப்பு உறவு மேம்படும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

ஹசீனா நன்றி: "தமக்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவரான இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என ஷேக் ஹசீனா கூறினார்.

வங்கதேச நாடாளுமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத்துக்கு மொத்தமுள்ள 350 இடங்களில் 300 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில், ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி 288 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP