கருணாநிதிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த மோடி

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

கருணாநிதிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த மோடி

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று தனது 95வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி கோபாலபுரம் இல்லம், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கம் தி.மு.கவின் முக்கிய இடங்களில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். 
இந்நிலையில் கருணாநிதிக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அதில், "கலைஞர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர், பேச்சாளர் கருணாநிதி இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர். அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுடன் தான் தமிழகம் வந்து கருணாநிதியை சந்தித்த போது எடுத்த புகைபடத்தை இணைத்துள்ளார். 

இதே போல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "கருணாநிதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களது மகிழ்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் நான் கடவுளை வேண்டுகிறேன்" என வாழ்த்து தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP