கர்நாடக சபாநாயகருக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு!

கர்நாடக சபாநாயகரின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மூவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 | 

கர்நாடக சபாநாயகருக்கு எதிராக எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு!

கர்நாடக சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மூவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

கர்நாடகாவில் கடந்த வாரம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து, முதல்வர் எடியூரப்பா அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. 

இதற்கிடையே, ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் 17 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அடுத்த 4 ஆண்டுகளுக்கு எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகேஷ், ரமேஷ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ சங்கர் ஆகிய மூவரும் இன்று  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

கர்நாடக சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர், இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP