புகார்தாரர்களை டீ, ஸ்நாக்ஸ் கொடுத்து வரவேற்கும் அதிசய காவல் நிலையம்!

காவல் நிலையம் என்றாலே, புகார் தர வருவோர் பல விதங்களில் அலைக்கழிக்கப்படுவார்கள் என்பதே பொதுமக்கள் மத்தியில் உள்ள பொதுவான எண்ணமாக உள்ளது. ஆனால், புகார் தர தங்களை நாடி வருவோருக்கு, டீ. ஸ்நாக்ஸ் தந்து வரவேற்கும் போலீஸாரை கேள்விப்பட்டிருக்கிறீ்ர்களா?
 | 

ஆமாம்...  ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்துக்குள்பட்ட கலு காவல் நிலையத்தில் தான், புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு இப்படி ராஜமரியாதை அளிக்கப்படுகிறது. அத்துடன் தொலை தூரத்தில் இருந்துவரும் புகார்தாரர்களுக்கு இங்கு உணவும் அளித்து உபசரிக்கின்றனர். மேலும், புகார்கள் இளைப்பாற காவல் நிலைய வளாகத்தில் பேட்மிண்டன் மைதானமும், கூரை வீட்டை போன்ற ஓய்வறையும் உள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்களை பதிவு தனிப்பிரிவு, ஆன்லைனில் எஃப்ஐஆர் பதியும் வசதி, அதிகாரபூர்வ இணையதளத்தில் குற்றப்பத்திரிகைகளை பதிவேற்றம் செய்வதென, நவீனத்திலும் கலு காவல் நிலையம் கலக்கி வருகிறது.

இவ்வாறு பிற காவல் நிலையங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதையடுத்து, கலு காவல் நிலையத்தை, நாட்டிலேயே சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP