'என்னை பப்பு-னு சொல்றாங்க' - பெயரை மாற்ற முடிவு செய்த ம.பி இளைஞர்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை கொண்டுள்ள ஒருவர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி பெயரை மாற்றிவிட வேண்டும் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
 | 

'என்னை பப்பு-னு சொல்றாங்க' - பெயரை மாற்ற முடிவு செய்த ம.பி இளைஞர்!

காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தியின் பெயரை கொண்டுள்ள ஒருவர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில்,  பெயரை மாற்றும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார். 

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரைச் சேர்ந்தவர் ராகுல் காந்தி(22). இவர், துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் ராகுல் காந்தி என்ற பெயரைக் கொண்டுள்ளதால், தான் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். 

அவர் கூறியபோது, "எனது தந்தை ராஜேஷ் மால்வியா. ஆடை விற்பனையாளர். பல பகுதிகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்து வந்தார். தந்தையுடன் பணிபுரிந்தவர்கள் அவரை ‘காந்தி’ என்று அழைத்துள்ளனர். அந்த பெயர் பிடித்துப்போனதால், அதுவே எங்களது குடும்பப்பெயராக மாறியது. எனக்கும் ராகுல் என்ற பெயருடன் காந்தி என்ற குடும்ப பெயரை இணைத்தனர். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை கொண்டுள்ளதால், எனக்கு அரசின் சலுகைகள் பல மறுக்கப்படுகிறது அல்லது சலுகைகளை பெறுவது கடினமாக உள்ளது. ராகுல் காந்தி என்ற பெயரில் தான் ஆதார் கார்டும் உள்ளது. அரசின் சேவைகளுக்காக ஆதார் அட்டையை காட்டும்போது போலியான நபரா? என்று சோதனை செய்கிறார்கள். எனக்கு 'டிரைவிங் லைசென்ஸ்' கொடுக்க மறுத்துள்ளனர். சிலர் 'பப்பு' என்றும் கிண்டல் செய்கின்றனர்.

என்னுடன் வர்த்தகம் செய்யும் நபர்களிடமும் என் மீது நம்பிக்கை வரவைக்க போராட வேண்டியிருக்கிறது" என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். 

இதனால், தனது பெயரில் காந்தியை நீக்கிவிட்டு தந்தையின் துணைப்பெயரான 'மால்வியா' என்பதை சேர்த்து 'ராகுல் மால்வியா' என்று மாற்றிக்கொள்ள போவதாகவும் தனது பெயரை மாற்ற அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த செய்தி மற்றும் ராகுல் காந்தி(மால்வியா) வின் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP